பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கண்பொரு திகிரிக் கமழ்குரற் றுழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவு நெஞ்சுமலி வுவகையர் துஞ்சுபதி பெயர. -நான்காம் பத்து; 1: 5.10. இவ்வடிகளுக்கு உரையெழுதும் பதிற்றுப்பத்தின் பழைய வுரைகாரர். இங்குக் குறிப்பிடப்பட்ட திருமால் திருவனந்த புரத்துத் திருமால் என்று உரை எழுதியுள்ளார். சங்க கால முதலே திருவனந்தபுரத்துத் திருமால் புகழ் பெற்று வருபவர் என்பது இதனால் அறியப்படுகின்றது. தாம் மேற்கொண்ட போரில் வெற்றி பெற அயிரை மலையில் அணிபெற வீற்றிருக்கும் அணங்காம் வெற்றி தரும் கொற்றவையைச் சேர மன்னர் பணிந்தேத்தினர். சேரர் படைவீரரும் தம் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டனர். குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உருகெழு மரபின் அயிரை பரைஇ. -ஒன்பதாம் பத்து; 9: 11-12, மேற்கூறிய செய்திகள் எல்லாம் நாம் சமயச் செய்தி களாகப் பதிற்றுப்பத்து கொண்டு அறிவனவாகும். பழைய செய்திகள் முருகன் பிணி முகம் என்னும் யானையின் மீது ஊர்ந்து சென்றமை, கடுஞ்சின விறல்வேள் களிறுார்ந் தாங்கு — 2; 1:6. தலையெழு வள்ளல்களில் ஒருவனும் பாரதத்தில் குறிக்கப்பட்டவனுமாகிய அக்குரன் என்பானின் ஈகைத் தன்மை, அக்குரன் அனைய கைவண் மையையே. 2; 4 — 2; 4:7.