பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

உலக மக்கள் கூறும் திங்கள், யாண்டு, ஊழி, வெள்ளம் என்பவை முறையே நின் வாழ்நாளின் நாள்: திங்கள், யாண்டு, ஊழி என்பனவாக நீடுக.'

நின்னாள், திங்க ளனைய வாக திங்கள் யாண்டோ ரனைய வாக யாண்டே ஊழி யனைய வாக ஆழி வெள்ள வரம்பின வாக. -ஒன்பதாம் பத்து; 10:51.54. இவை போன்று வேறு முடியுடையரசர்கள் எவரும் -உள்ளங் குளிரப் புலவர்களால் சிறக்க வாழ்த்தப் பெற்றிலர் என்பதைப் பழந்தமிழ் இலக்கியத்தினைப் படிப்போர் உணர்வர். இதுகொண்டு சேர மன்னர்தம் ஆட்சிச் சிறப்பும், ப ண் பு மேம்பாடும், கொடை வண்மையும் நன்கு உணரப்படும்.