பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மேலும், இறைமாட்சி' என்ற அதிகாரத்தில், அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இங்ங்ான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு. - -திருக், 382. என்று குறிப்பிட்டுள்ளார். வேந்தர்க்கு வேண்டுவன திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் ஆகிய நான்கு பண்புகளாகும் என்பது இதனால் தெரிய வருகின்றது. அஞ்சாமைக்கு அடுத்த நிலை ஈகைக்கு வழங்கப்பட் டிருப்பது நுண்ணிதின் அறியத்தக்கது. மேலும் இதே அதிகாரத்தின் இறுதிக் குறள் வருமாறு: கொடை அளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. - திருக், 390. இக்குறளில் வேந்தர்க்கு எல்லாம் விளக்காக வேண்டு மெனில் ஒர் அரசன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய நான்கு செயல்களையும் உடையவனாக விளங்குதல் வேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது. இவ்வாறு அரசர்க்கே உரியதெனச் சிறப்பாக நுவலப் படும் ஈகைப் பண்பினைப் பண்டைநாளைச் சேர மன்னர் சிறக்கப் பெற்றிருந்தனர் என்பதனைப் பதிற்றுப்பத்து எனும் சங்க நூல் கொண்டு நன்கு தெளியலாம். பதிற்றுப்பத்துப் பாடல்களின் கீழே காணப்பெறும் பதிகங்கள் வழி அந்நாளையச் சேர மன்னர்தம் கொடைப் பெருமையினை உணரலாம். ஆயினும் பதிகம், பாடல் களைப் பாடிய புலவர்களால் பாடப்பட்டது அன்று என்றும், பிற்காலப் புலவர் ஒருவர் எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் என்றும் அறிஞர் பலர் கருத்துக் கொள்கின்றனர். எனவே இக்கட்டுரையின்கண் பதிகவழியன்றிப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் வழிப் புலனாகும் சேர வேந்தரின் ஈகை வளத் தினைக் காண்போம்.