பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். - திருக்; 756. என்ற குமட்கருத்துப்படி பகைவரைப் போரில் வென்று நிறையாகக் கொள்ளும் பொருள் வேந்தனுக்கு உரிய பொருள், வருவாய் வகையில் ஒன்றென்பது புலப்படுகிறது. சேர மன்னர்களோ வீரத்தில் மிகவும் வல்லவர்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இருமுந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின் சேரன். * - - - - -இரண்டாம் பத்து ; 10:2.4. எனறும, செங்குட்டுவன்,

  • * * * * H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. ர்ேபுக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ.

—5; 8:3-4. எனறும, வடதிசை எல்லை இமயம் ஆகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ. -ஐந்தாம் பத்து ; 3:7.11. என்றும், குடக்கோ இளஞ்சேர விரும்பொறையை, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக. என்றும் கூறப்படுவதிலிருந்து சேர மன்னர்களின் செரு மேம் பாட்டினையும், வீரவென்றிச் சிறப்பினையும் நன்கு விளங்கக் காணலாம். சே. செ. இ.9