பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இரண்டாம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனைக் குமட்டுர்க் கண்ணனார் சிறக்கப் பாடியுள்ளார். அவர் பாடல்கள் வழிச் சேரனின் வீரமும் ஈரமும் ஒருங்கே புலனாகின்றன. பசியால் வருந்திய இரவலர் கூட்டம் காடும் மலையும் கடந்து, துன்பம் பலபட்டுச் சேரன் தலை வாயிலை அடை கிறது. அவர்களுக்குச் சேரன், அரிவாளால் அறுத்த வெள்ளிய நினத்தோடு கூடிய ஆட்டிறச்சியை நல்ல வெண்ணெலால் ஆக்கிய சோற்றிலே கலந்த உணவினையும், நல்ல கள்ளின் தெளிவினையும் கொடுத்தான் என்று குறிப் பிடுகின்றார். எ.குபோழ்ந்து அறுத்த வால்கிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெஞ்சோறு நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி. -இரண்டாம் பத்து ; 2:16-18. பருந்தின் கரிய சிறகு போன்று கருமை கொண்டும் கிழிந்தும் இருந்த கந்தல் உடையை நீக்கிப் பட்டுடை (நூலாக்கலிங்கம்) வழங்கினான். மகளிர்க்கு உணவோடும் உடையோடும் நல்ல ஒளிவிடும் அணிகலன்களையும் அளித்தான் என்று மேலும் குறிப்பிடுகின்றார் குமட்டுர்க் கண்ணனார். நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய அமர்புமெய் யார்த்த சுற்றமொடு நுகர்தற் கினிதுகின் பெருங்கலி மகிழ்வே. -இரண்டாம் பத்து ; 2:19-25. பிறிதொரு பாடலில் புலவர் குமட்டுர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அ க் க ா ல த் தி ல் கொடையில் சிறந்திருந்த அக்குரனோடு உவமிக்கின்றார்.