பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 வற்றை நல்குவன் என்பதனையும் காப்பியாற்றுக் காப்பியனார் கவினுறக் கிளத்தியுள்ளார். செல்லா யோதில் சில்வளை விறலி

  • = H = H # * * * * * * * * * * * * * * * HH

காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர்சுடர் அழல்விடுபு மரீஇய மைந்திற் றொழில்புகல் யானை நல்குவன் பலவே. -நான்காம் பத்து; 10:21-31 ஐந்தாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய சேரன் செங்குட்டுவனைப் பரணர் அவன் கொடைப் பண்பெல்லாம் அழகுற விளங்கும் வண்ணம் வருணித்துள்ளார். 'ஓம்பா வீகையின் வண் மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழி' அருள் சுரக்கும் நெஞ்சினன் செங்குட்டுவன் என்பதனைப் பரணர் பாடியுள்ளார். மேலும், அருவி வற்றிப் பெருவளம் சுருங்கிய காலையில் வானம் வளமான மழையைச் சொரிந்தது போலத் தன்னை அடைந்தவர்களுக்கு வாரி வழங்கி, நகைவர் ஆர நன்கலஞ் சிதறும் பண்பினன் .ெ சங்கு ட் டு வ ன் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். விறலியர் பெண் யானைகளையும், கொண்டி மள்ளர் கொல் களிறுகளையும், அகவலர்கள் குதிரைகளையும், வயிரியர் கள்ளினையும் பெறுகின்றனர் எனச் சேரன் செங்குட்டுவனின் கொடைவன்மை சிறப்பித்துப் பேசப் பட்டுள்ளது. உறுவர் ஆர ஓம்பாது உண்டு நகைவர் ஆர நன்கலஞ் சிதறி பாடு விறலியர் பல்பிடி பெறுக கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக அகவலன் பெறுக மாவே