பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிறைந்து நெடி திராத் தசும்பின் வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின் வண்கை வேங்தேகின் கலிமகி ழானே. -ஐந்தாம் பத்து; 3:19-36. இப்பாட்டின் இறுதி அடியில் சேரன் செங்குட்டுவன் கையினைப் பரணர் 'வண்கை' எனப் புகழ்ந்திருப்பதனைக் காண்க. மேலும் அவன் போர்க்களத்தில் முயற்சியால் பெற்ற பெரிய பொருள்களையும் அருமையுடைத்தென்று எண்ணாமல் தன்னைப் பாடி வந்த புலவர்க்கு வாரி வழங்கி விடுகின்றான் என்று பரணர் புகன்றுள்ளார். பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய வென்னாது ஓம்பாது வீசி கலஞ்செலச் சுரத்தல் அல்லது கனவினும் களைகென வறியாக் கசடில் நெஞ்சம். -ஐந்தாம் பத்து; 4:3.6. கரவாது கொடுத்துண்ணும் சேரனின் கொடை நெஞ்சத்தினைப் பரணர் கசடில் நெஞ்சம் என்று பொருத்தமுறக் குறிப்பிட்டுள்ளார். சேரனைப் பாடிய இழையரும் குழையரும் நறுந்தண் மாலையரும், மகளிரும் போரில் வெல்லும் குட்டுவனைக் கண்டால் பெயர்ந்து பிறிதோரிடம் செல்லமாட்டார்கள் என்று புலவர் புகழ்ந் துரைத்துள்ளார். வெல்புகழ் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே. - ஐந்தாம் பத்து; 6:13-14. தான் மேற்கொள்ளும் ஒ வ் வொரு போரிலும் செங்குட்டுவன் .ெ வ ல் கி றா ன். உடனே பரிசிலர் களிற்றினைப் பரிசிலாகப் பெறுகிறார்கள். நன்னுதல் விறலியர் அவன் வெற்றிச் சிறப்பிற்காக அவன் தொன்னகரில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.