பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 அட்டா னானே குட்டுவன் அடுதொறும் பெற்றா னாரே பரிசிலர் களிறே பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல நன்னுதல் விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பின் அவன் உரையா னாவே. -ஐந்தாம் பத்து; 7: 1-8. பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவினையும், ஒளி பொருந்திய நெற்றியினையுடைய விறலியர்க்கு ஆரத் தினையும் அளிக்கின்றான் செங்குட்டுவன். பைம்பொற் றாமரை பாணர்ச் சூட்டி ஒண்ணுதல் விறலிலர்க்கு ஆரம் பூட்டி. -ஐந்தாம் பத்து ; 8: 1-2. பகைவர் நாட்டிலே திறையாகப் பெற்ற பொருள் களையெல்லாம் எளிதில் பாணர் பாடும் பாடல்களுக்குப் பரிசாக அளித்துவிடுகின்றான் செங்குட்டுவன் என்று பரணர் வியந்து பாடுகின்றார். ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்டிவர் கொள்ளாப் பாடற்கு எளிதின்கீ ஈயும் -ஐந்தாம் பத்து 8: 5-6. கூட்டம் கூட்டமாக விறலியர்குழாம் செங்குட்டுவன் தன் அரண்மனை சென்று, சுற்றத்துடன் விருந்துண் கிறார்கள். யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின் துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர் கொளைவல் வாழ்க்கைதுங் கிளையினிது உணி இயர் -ஐந்தாம் பத்து; 9: 1-3. மேலும் செங்குட்டுவன் தனக்கு என ஒருவகைச் சோறும் பரிசிலர்க்கு என ஒருவகைச் சோறும் சமைக்குமாறு தன் ஏவலரைப் பணிக்கின்ற வழக்கம் இல்லையென் பதனைப் பரணர்,