பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சோறுவேறு என்னா ஊன்றுவை அடி சில். - —5; 5: 5-13. என்று நயம்படக் கிளத்திக் கூறியுள்ளார். இனி, ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவனாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடத்துக் காக்கைபாடினி யார் கண்ட கொடை வள மாண்பினைக் காண்போம். போர்க்களத்தில் அஞ்சாது எதிர்நின்று பகைவரைக் கொன்று வெற்றி கொண்ட இடியன்ன வன்மை பெற்ற கைகள், இரப்போர் புன்கண் தீர ஈதற்பொருட்டு மட்டுமே கவியக் கற்றிருந்தன. எத்துணை அரும்பொருளாயினும் அதனை எவரிடத்திலுமிருந்தும் ஏற்பதற்கு அவர் கைகள் கூசி நின்றன. இதனை, நல்லமர்க் கடந்ததின் செல்லுறழ் தடக்கை இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய மலர்பறி யா. -ஆறாம் பத்து; 2 : 11-13:. என்னும் அடிகள் விளக்கா நிற்கின்றன. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இரப்பவர்தம் வறுமை நோய்க்குப் பகைவனாக விளங்கினான் அவர்தம் வறுமை யைப் போக்கும் பொருட்டு, நாடோறும் நல்ல பல அணிகலன்களை அரியனவென்று பொருட்படுத்தாது வாரி வழங்கினான். இத்தகு வள்ளன்மை உள்ளம் வாய்த்த காரணத்தினால் புலவர்கள் அவனுக்குப் பாராட்டு மொழிகள் பல பகன்றார்கள். இவ்வாறு இசை மேம்பட்ட மையால் திசைபோய அவன்தன் வண்மையைக் கேள்வி யுற்றே, தாம் அவனைக் காணவந்ததாகக் கவினுறக் கவிதையில் வடித்துக் காட்டுகின்றார் காக்கை பாடினியார் நச்செள்ளையார். வள்ளியை என்றலின் காண்குவந் தி சினே இரவலர் புன்கண் தீர நாடொறும்