பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 உரைசால் நன்கலம் வரைவில வீசி அனையை ஆகல் மாறே. = -ஆறாம் பத்து; 4 : 1.9: இவ்வாறு கொடைமடம் கொண்ட கோமகனின் நாட்டில் வறுமையும் தங்குமோ! வறுமை வற்றி வளம் நிறைந்தது அவன் திருநாட்டிலே. இல்லை' என இரப் போர் இல்லையாயினர்; ஆயினும் இரவலர் வாரா வைகலை அவன் சிறிதும் விரும்பவில்லை. எனவே பிற நாடுகளிலிருந்து இரவலர்களைத் தேரில் கொணர்ந்து, அவர்களுக்கு வேண்டுவனவற்றை விரும்பிக்கொடுத்து அவர்களை மாறா மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான் மன்னவர் பெருந்தகை. வாரார் ஆயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்தவர்க்கு ஆர்பதன் நல்கும் நகைசால் வாய்மொழி இசைசால தோன்றல். -ஆறாம் பத்து; 5 10-12. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடத்துக் க ண் ட கொடை மடத்தின் சிறப்பு இம்மட்டும் அன்று, இதற்கு மேலும் புலனாகின்றது பிறிதொரு பாட்டிலே. இளங் குழந்தைகளைப் பெற்றெடுத்த சிலம்பணிந்த மகளிர்ஆன்ற அறிவும், அடங்கிய கொள்கையும், திருந்திய நல்லிசையும் கொண்ட மகளிர்-ஊடற் கோலத்தோடு ஊடிய காலையில் துளிர்த்த கண்ணிருக்கு அவன் பெரிதும் அஞ்சினான். ஆயினும் அதனைக் காட்டிலும் இரவலர் புன்கண்ணிர்க்குப் பெரிதும் கவன்றான்' என்று விறலி யாற்றுப் படையில் வைத்து விளங்கப்பாடுகின்றார் புலவர். இளந்துணைப் புதல்வர் கல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவில் தோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர் துணித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. - ஆறாம் பத்து; 7 : 10-15.