பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 போரிலே அரிதாகப் பெற்ற பொருள்களைத் தன்னைத் தேடிவரும் இரவலர்க்கு வாரி வழங்குகின்றான் வண்மை நெஞ்சம் சார்ந்த வாழியாதன். அதுபோது இவற்றை நாம் வைத்துக்கொள்ளாமல் கொடுத்துவிட்டோமே. என நினைத்து வருந்தவில்லை. கொடுக்குந் தோறும் மகிழவும் மாட்டான். கொடுக்கும் பொழுதெல்லாம் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பான்' என்று. அழகுறக் கபிலர் பாடுகின்றார். புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இணைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்! அளிக்கென இரக்கு வாரேன்! எஞ்சிக் கூறேன் ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான் ஈத்தொறும் மாவள் ளியன். -ஏழாம் பத்து 1:7.14.. வறியரைக் கண்டால் வல்லே விரைந்து பொருள் வழங்குவான் என்றும், மழையினும் பெரும்பயன் பொழி வான் என்றும், பாணர் புரவலன்' என்றும், பரிசிலர் வெறுக்கை' என்றும் சேறுசெய் மாரியின் அளிக்கும். சாறுபடு திருவினன் என்றும் பலவாறு செல்வக் கடுங்கோ வாழியாதன் புலவரால் புகழப்பட்டுள்ளான். இரவலர்க்குத் திறையாக வந்த களிற்றினையும், அம்பண அளவை நெல்லினையும் ஆர்பதமாக நல்குவன் என்றும் கபிலர் வாழியாதனின் வரையாத ஈகையுள்ளத் தினை உளமாரப் பாராட்டுகின்றார். தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லிற் அம்பண வளவை விரிந்துறை போகிய ஆர்பதம் நல்கும் என்ப. -ஏழாம் பத்து 6:7.9. :கல்லுயர் நேரிமலைக்குரிய பொருநனும் சான்றோர் பெ ரு ம க னு மா ன செல்வக்கடுங்கோவாழியாதனைப்