பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 42 பாடிச் சென்றால், கடனறி மரபிற் கைவல் பாணனாகிய நீ கொடுமணம் என்னும் ஊரிற் செய்யப்படும் வேலைப்பாடு மிகுந்த பொற்கலங்களையும், பந்தர் என்னும் ஊரிற் கிடைக்கும் நல்ல முத்துகளையும் நின் சுற்றத்தாருடன் பெறுவாய்' என்று பாணாற்றுப்படை யமைந்த பாடலில் கபிலர் செல்வக் கடுங்கோவின் மடங்காத கொடை நெஞ்சத்தினைக் கவினுறப் பாடியுள்ளார். - கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண! தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை! பறைபண் ணழியும் பாடுசால் நெடுவரைக் கல்லுயர் நேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே. -ஏழாம் பத்து ; 7:1-4&21-23. இவ்வாறு செல்வக் கடுங்கோ வாழியாதன் அரசாட்சி நிழலில் மக்கள் நாமம் அறியா ஏம வாழ்க்கை வாழ்வ தாகக் கபிலர் கூறும் திறனை நினையுந்தொறும் நெஞ்சு உவக்கின்றது. கபிலர்க்குச் செல்வக் கடுங்கோ வாழியாதன், சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்தான் என்றும், நன்றா என்னும் குன்றேறித் தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிப் பரிசாகக் கொடுத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்றும் ஏழாம் பத்தின் பதிகம் பகருகின்றது. பெருங் குன்றுார் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில், - அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெங் நாவின் உவலை கூராக் கவலையில் நெஞ்சின் னேவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே. -ஒன்பதாம் பத்து ; 5:9-13.