பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 ஈர நெஞ்சத்தினைக் காண்போம். பெருங்குன்றுனர் கிழார் பாடிய இப்பத்தால் மன்னனின் மாண்புயர்ந்த கொடைப் பண்பு வெளிப்படுகின்றது.

பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வம்' 'உடையவன் சேரன் என்பதனை முதற்கண் தெரியப்படுத்து கின்றார் புலவர். இல்லோர் துன்பம் தொலைய ஈர நெஞ்சோடு நல்கும் நயனுடையன் நனந்தலை யுலகத்தில் நல்லிசையை நிலைநிறுத்திய இச்சேரன் என்பதனை விளங்க உரைக்கின்றார் பொல்லாங்கு அறியாது வடியா நாவின் வல்லாங்கு பாடும் பெருங்குன்றுார் கிழார்.

நல்லிசை நிலைஇய நனங்தலை யுலகத்து இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் பாடுகள் புரவலன் ஆடுகடை அண்ணல். -ஒன்பதாம் பத்து; 6 : 5.8. நீரினும் தீந்தண் சாயல' னாகிய இளஞ்சேரல் இரும்பொறை பாடினிக்கு நன்கலம் நல்கும் நயனுடைய நெஞ்சினன். ஆற்றினைக் கடக்க உதவும் வேழக் கரும்பினும் வல்லவன். - சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யு நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லனால் அளியே. -ஒன்பதாம் பத்து; 7 : 1-5. வேழக்கரும்பு ஒருவன் ஆற்றினைக் கடக்கும்வரைதான் பயன்படும்; ஆயினும் சேர மன்னன் புலவர்க்கும் மற்றவர்க்கும் எப்பொழுதும் உதவும் இளகிய ஈகை நெஞ் சினனாக உள்ளான் என்பதனை இப்பகுதியால் புலவர் எடுத்துக்காட்டும் நயம் அறிந்து மகிழத்தக்கதாகும்.