பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பதிற்றுப்பத்து காட்டும் சமுதாய வாழ்க்கை சேர நாடு இயற்கை வளம் நிறைந்த நாடு; நீர் வளமும் நில வளமும் ஒருங்கியைந்த நாடு. குன்றாத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேடில்லாத செல்வமுடை யோரும் ஒருங்கியைந்து வாழ்வதே நாடு' என்றும், அளவிறந்த பொருளுடைமையால் பிற நாட்டவராலும் விரும்பத்தக்கதாய், கேடின்மையோடு கூடி மிக விளைவதே நாடு என்றும், பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன் கண் வருங்கால் அவற்றைத் தாங்கி, அதன் மேல் தன்னரசனுக்கு இறைப் பொருள் முழுவதையும் உடம் பட்டுக் கொடுப்பதே நாடு’ என்றும், மிக்க பசியும் நீங்காத நோயும் புறப்பகையும் இன்றி இனிது நடப்பதே நாடு" என்றும், பகைவரால் கெடுதல் அறியாததாய், ஒருகால் அரிதிற் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளம் குன்றாததே தலைசிறந்த நாடு" என்றும், தங்கண் வாழ்வார் 1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. - திருக்குறள்; நாடு: 1 2. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. - திருக்குறள்; நாடு : 2 3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற் கிறை யொருங்கு நேர்வது நாடு. - திருக்குறள்; நாடு : 3 4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. - திருக்குறள்; நாடு : 4 5. கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. - திருக்குறள்; நாடு : 5