பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 47 தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடையவற்றையே நூல் வல்லார் நாடு என்பர்" என்றும், நாட்டிற்கு அழகு என்று நூலோர் சொல்வன நோயின்மையும், செல்வம், விளைவு, இன்பம், காவல் முதலியன உடைமையும் ஆகும் என்றும் திருவள்ளுவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கும் நாட்டிற்குரிய நல்ல இலக்கணங்களுக்கெல்லாம் சேர நாடு சான்றாகத் துலங்கியதனைப் பதிற்றுப்பத்துப் பயில்வார் நுண்ணிதின் உணர்வர். இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு." என்ற குறட்பாவின்கண் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டிற்கு உறுப்பாவன சேர நாட்டில் திகழ்ந்திலங்கின. மக்கள் வாழ்வு வளம்பட அமைய சேரநாடு எவ்வாறு வளங்கள் பல நிறைந்து விளங்கியது என்பதனை முற்படக் காண்போம். சேர நாட்டில் நெய்தல், குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நான்கு நிலப் பொருள்களும் ஒருங்கே விளைந்து, வளம் மலிந்து காணப்பட்டது என்பதனைக் குமட்டுர்க் கண்ணனார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு கனந்தலை நன்னாட்டு விழவுஅறு பறியா முழவுமிழ் மூதூர்." இதனால் சேரநாடு கடல்படு பொருள்களையும், மலை படு பொருள்களையும், ஆறுபடு பொருள்களையும் அழகுறப் பெற்று மிளிர்ந்ததோடு, பிற நாட்டுப் பொருள்களும் அந் 6. நாடென்ப நாடா வளத்தன தாடல்ல நாட வளந்தரும் நாடு. - திருக்குறள்; நாடு : 6 7. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. - திருக்குறள்; நாடு : 8 8 திருக்குறள்; நாடு 7. 9. பதிற்றுப்பத்து; 2 5 : 16-18.