பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நாட்டில் வந்து அங்காடியில் குவிந்து கிடந்தன என்பது பெறப்படுகின்றது. பிறவும் என்ற சொல்லால் பெறப் படும் குறிப்புப் பெரிதும் சேர நாட்டு வளத்தைச் சிறப்பிப்ப தாகும். மேலும் அந்நாட்டு மக்கள் இடையறாத விழாக் களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். மூதுரர்களில் முழவு இசை முழங்குகின்றது. பொன்னை மிகவுடைய கடை வீதிகள் பொலிந்து விளங்குகின்றன. வெற்றி முரசும் கொடை முரசும் மாறாது முழங்குகின்றன. பகை முதலிய வற்றால் துன்புறுதலில்லாத நலம் பல நிறைந்த நல் வாழ்க்கையினையுடையவராய் மக்கள் உ ள் ள ன ர். உண்மையே உரைத்துப் புலனைந்தும் அடங்கி ஒழுக்க மேம் பாடுடைய நிரயத்தின் நீங்கிய அறநாட்டமும் வேட்கையு முடைய பெரிய்ோர் நல்லறங்களையே நாளும் நாடிச் செய் கின்றனர். அவரும் அவர்தம் சுற்றமும் வாழும் ஊர்கள், பகை பசி பிணி முதலியன இன்மையின் குற்றங் கொள்ளா தனவாய் உள்ளன. அவ்வூர்களில் வாழும் மக்கள் பிழைப்பு நோக்கிப் பிற பதி பெயராத தன்மையராய் உள்ளனர். வாழ்க்கையில் நுகர வேண்டுவனவற்றை விடாது துகள் கின்றனர். நோய் சிறிதுமின்றியும், புதுவருவாயினை யுடைத்தாயும் நாடு நாடாக உளது. உண்ணத் தகுவன வற்றை நிரம்பவுண்டதனால் நாத்தடித்து, குழறும் மழலை நாவினால் மெல்லிய சொற்களை வழங்கும் யாழ் முதலிய இசைக் கருவிகளை இனிதாக இயக்கும் இயவர் இவ் வுலகத்தோர் பொருட்டு நீ வாழிய' என்று நாட்டின் நல்லிறைவனாம் சேர மன்னனை வாழ்த்துகின்றனர். இவையெல்லாம் நிகழக் காரணம் சேர மன்னன் பலரும் புகழ்ந்து பாராட்டும் பண்பினனாய், நாட்டு மக்களை நலமுறக் காத்தோம்பும் பண்பில் மேம்பட்டு விளங்குதலால் ஆகும் எனப் புலவர் குமட்டூர்க் கண்ணனார் பாங்குற மொழிந்துள்ளார்: கொடிநிழற் பட்ட பொன்னுடை கியமத்துச் சீர்பெறு கலிமகிழியம்பு முரசின்