பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெருத்த கண்களையுடைய எருமைக் கூட்டத்தைப் பிறவிடத்திற்கு மேய்ச்சல் வேண்டிச் செல்லாவாறு தடுக்கும் வயல்களாயின என்றும், இளம்பெண்கள் கூடி ஒலிமிக்க துணங்கைக் கூத்தாடும் இடங்கள் வளைந்த தலையை யுடைய முதிய பசுக்கள் ஆம்பலை மேயும் இடங்களாயின என்றும், தழைத்த தென்னைகளும், பறவையினங்கள் பாங்குறக் கூடியொலிக்கும் மருத மரங்களும், கால்வாய் களையுடைய பூம்பொய்கைகளும் உடைமையால் புலவர் பாடும் புகழ் பெற்ற செல்வம் பொருந்திய ஊர்களை யுடைய நாடு என்றும் சேரநாட்டு வளத்தைச் சிறக்கப் பாடியுள்ளார்: தொறுத்தவயல் ஆரல்பிறழ்கவும் ஏறுபொருதசெறு வுழாதுவித்துங்வும் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்கண் எருமையின் கிரைதடுக் குருவும் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா ஆம்பல் ஆர்கவும். ஒலிதெங்கின் இமிழ்மருதிற் புனல்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் நாடு. ' பாலைக் கெளதமனாரும் இதே போக்கிலேயே இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் காத்தோம்பிய நாட்டினைக் கவினுறக் கிளத்துகின்றார்: யாண்டு பிழைப் பறியாது பயமழை சுரங்து நோயின் மாந்தர்க் கூழி யாக' என்றும், கடலுங் கானமும் பலபய முதவ' என்றும், 12. பதிற்றுப்பத்து 2 : 3 I-10. 13. பதிற்றுப்பத்து 3 ; I : 30–31. 14. பதிற்றுப்பத்து 3 ; 2 : 6.