பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பொருந்திய அகன்ற புலத்தில் விலங்கினங்கள் புல் மேய்தல் வேண்டி விடப்பட்ட கரம்பு நிலத்தில் உண்டாகிய வெடிப்புகளில் நீர் நிறைந்து தேக்குமாறு இடந்தொறும் பரந்து மிகுதல் வேண்டித் தழைகளைச் சுமந்து சினமுற்று வருவது போலும் பேராரவாரத்தோடு வரும் பேரி யாற்று வெள்ளத்தின் சிவந்த நீரின் ஆரவாரமல்லது, சேரநாட்டின் வாழும் மக்கள் உயிர்கட்குக் கொடுமை செய்யும் போர்ப் பூசல் இல்லை என்பதும் அறியப்படு கின்றன. பல்யானைச் செல்கெழு குட்டுவன் காக்கும் சேரநாடு குவளைப் பூவினை முழுதாக அணியும் விளங்குகின்ற மகளிரை உடைத்தாயுளது. ஆம்பல் பூவினை இடை யிடையே தொடுத்த தழைகளை யுடுத்து, கள்ளுண்ணும் இயல்பினரான இசை இயக்கும் இயவர் தங்கியிருக்கும், நீர் நிலைக்கு அணித்தேயிருக்கும் ւն(Ե.5 மரத்தின் மீதேறித் தெளிந்த தம் விளிக் குரலை இசைப்பர். வயலருகே உள்ள சோலைகளில் தங்கும் பசிய மயில்கள் அம் மகளிர் இசைக்கு இயைந்து ஆடுதலால் எழும் ஆரவாரமும், புனல் மதகுகளைத் தாக்கி எழுப்பும் ஆரவாரமும், நன்செய் நிலச்சேற்றில் இறங்கிவிட்ட வண்டிச் சக்கரத்தினை, அவ் வண்டியினைச் செலுத்து வோர் வண்டியிற் பூட்டியுள்ள எருதுகளை உரப்பும் ஆரவாரமும் அல்லாது, வேறே போர் ஆரவாரம் ஏதும் கேட்டறியாத குன்றாத நல்ல புதுவருவாயினை உடைய தாடாகிய பகைவர் தேயங்கள் பல்யானைச் செல்கெழு குட்டுவன் சினந்து நோக்குதலாற் சீரழிந்தன என்று புலவர் பாடுகிறார். சிதைந்தது மன்ற சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் துண்நெறி யடைச்சி அலர்ந்த வாம்பல் அகமடி வையர் சுரியலஞ் சென்னிப் பூஞ்செய் கண்ணி அரிய லார்கையர் இனிதுகூடு இயவர்