பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 துறைகணி மருத மேறித் தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி யிசைப்பிற் பழனக் காவிற் பசுமயி லாலும் பொய்கை வாயிற் புனல்பொரு புதவின் நெய்தல் மரபி னிரைகட் செறுவின் வல்வா யுருளி கதுமென மண்ட அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மளறுபோகு விழுமத்து சாகாட் டாளர் கம்பலை யல்லது பூசல் அறியா கன்னாட்டு யாணர் அறாஅக் காமரு கவினே." பல்யானைச் செல்கெழு குட்டுவனின் நாட்டில் மருதவளம் சிறந்து விளங்குகின்றது. அவன் நாட்டு மகளிர் அவலை எறிந்து உலக்கையை வாழை மரத்தில் சார்த்தி வைத்துவிட்டு வள்ளைப் பூக்களைக் கொய்வான் வேண்டி வயலில் இறங்குவர் என்றும், அவ் வயல்கள் பருத்த கதிர்களினால் வளைந்துள்ள நாட்கள் கொண்டு தாழ்ந்து சாய்ந்து கிடக்கும் தன்மையுடையன என்றும் பாலைக் கெளதமனார் குறிப்பிடுகின்றார்: அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயல். ' மேலும் அந்நாட்டில் எல்லாக் காலங்களிலும் கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது என்பதனையும் குறிப்பிடுமுகத்தான் மருத வைப்பின் மாறா வளமும் யாணரும் மனங்கொள்ளும் வகையில் கிளத்தப்பட்டுள்ளன. கால மன்றியுங் கரும்பறுத் தொழியாது." 18. பதிற்றுப்பத்து 3 7. 19. பதிற்றுப்பத்து 3 9 : 1-3. 20. பதிற்றுப்பத்து 3 10 : 14.