பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அடுத்து, காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம்பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் நாடு அழகுறக் கூறப்பட்டுள்ளது. நெய்தல் வளஞ் செறிந்த அவன் நாட்டினைப் புலவர், வண்பிணி யவிழ்ந்த கண்போல் நெய்தல் நனையுறு நறவின் நாடுடன் கமழ என்ற அடிகளில் புலப்படுத்தியுள்ளார். மேலும் அவரே பிறிதொரு பாட்டில், தாழை மடல் அவிழ்ந்து மனம் பரப்பும் கடற்றுறையும் குளிர்ந்த கடற் பரப்பும் கொண்ட நல்ல நாடு ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் நாடு என்று அகமகிழ்ந்து பாராட்டியுள்ளார். கமழுந் தாழைக் கானலம் பெருந்துறைத் தண்கடற் படப்பை கன்னாடு.”* புன்செய் நிலங்களை யுழுது பயிர் செய்தும் வலிய கையினையுடைய உழவர்குடிப்பெருமக்கள், கழுத்திக் கட்டிய மணிகள் ஒலிக்கும்படியான கடாக்களைக் கொண்டு ஏர் பூட்டி உழுது கலப்பையின் கொழுச் சென்ற படைச்சாலின் பக்கத்தே அசைகின்ற ஒளிர்கதிர்களை யுடைய அழகிய மணிகளைப் பெறும் அகன்ற இடம் அமைந்த ஊர்கள் சேரநாட்டில் நிறைந்துள்ளன என்று காக்கை பாடினியார் கவினுறப் பாடுகின்றார்: புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் சீருடைப் பல்பக டொலிப்பப் பூட்டி நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின் அலங்கு கதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடு.: ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடத்து, நாடும் காடும் பள்ளமும் மேடும் என்ற பல்வேறு வகைப்பட்ட அகன்ற 21. பதிற்றுப்பத்து 6 7.18. 22. பதிற்றுப்பத்து; 6 5 : 5.6 23. பதிற்றுப்பத்து; 6 8 : 15.19.