பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 நாடுகளிலிருந்து வந்து தொக்கனவும், மலையிடத்தனவும் கடலிடத்தனவுமாகிய பொருள்களும் நிறைந்துள்ளன என்பர் காக்கை பாடினியார்: பல்வேறு வகைய கனந்தலை யீண்டிய மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும்.' மாறாத விளைவினை நல்கும் வயல்களால் நீங்காத புதுவருவாயினை யுடைத்தாயுள்ளது சேரநாடு என்பது, மறாஅ விளையுள் அறாஅ யாணர் என்ற அடியினால் பெறப்படுகின்றது. முரம்பு நிலத்திலும் உழுது பயரிடுவோர், விளங்குகின்த ஒளிக்கதிரையுடைய அழகிய மணிகளைப் பெறுவர் என்றும், அத்தகு இடமகன்ற ஊர்களை உடைத்தாயுள்ளது செல்வக் கடுங்கோ வாழியாதனுடைய நாடு என்றும் பொப்யா நாவிற் கபிலர் குறிப்பிடுவர் : is is a + = h = * * * * * * * = செம்பரன் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. " எட்டாம் பத்தில் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையை அரிசில் கிழார் பாடியுள்ளார். தொகுதி கொண்ட மழை மேகம் நாற்றிசையும் காலிறங் கித்தண்ணிய மழையைப் பெய்ததாக, மிகுதியாக விதைத் தற்கேற்பப் பரந்த உழுநிலங்களை யுடைய சிலவாகிய ஏர்களையுடைய உழவர், குளிர்ந்த நீர்த்துறையில் மலர்ந்: துள்ள பகன்றைப் பூவாற் றொடுத்த அழகுடைய மாலையை வெளுக்கப்பட்ட வெள்ளாடையைப் போலத் தலையிற் சூடிக் கொண்டு உழும் படைச்சாலிடத்தே - - _ 24. பதிற்றுப்பத்து 6 9 : 14.15. 25. பதிற்றுப்பத்து; 6 10 : 8. 26. பதிற்றுப்பத்து; 7 6 : 18 - 20.