பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 விளங்குகின்ற கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற இடமகன்ற ஊர்கள் பொருந்திய நாடு என்று அரிசில் கிழார் சேர நாட்டின் செல்வ வளனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

  • * * * * * * * * * * * * * * * * * * * * கால்கொண்டு கருவி வானங் தண்டுளி சொரிந்தெனப் பல்விதை யுழவிற் சில்லே ராளர் பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி இலங்குகதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடு...27 சேர நாட்டின்கண் அமைந்துள்ள கொல்லிமலையின் வளம் பெருங்குன்றுார் கிழாரால் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது.

முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுணிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் கலிமகிழ் மேவலர் இரவலர்க் கீயும் சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லி. காந்தட்பூவால் தொடுத்த கண்ணி சூடிய செழித்த குடிப்பிறந்த செல்வ மக்கள் முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தையுண்டு விழாக் கொண்டாடினாற்போல, புதுமையினையுடைய கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளைக்குடித்து, ஆரவாரத்தை யுடைய மகிழ்ச்சியை விரும்பி, இரப்போர்க்கு வேண்டுவன தல்கும் வண்டுகள் பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லி என்பது இப்பகுதியால் பெறப் படுகின்றது. 27. பதிற்றுப்பத்து 8 , 6 : 9 - 15. 28. பதிற்றுப்பத்து 9 , 1 : 19 - 24.