பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 துண்ணிய மணல் சான்ற அடைகரையை யுடைக்கும் அலைகளையுடைய குளிர்ந்த கடற்பகுதிக்குத் தலைவன் என்று இளஞ்சேரல் இரும்பொறை போற்றப்படுகிறான். உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண லடைகரை யுடைதரும் தண்கடற் படப்பை நாடுகிழ வோயே..: மழை உரிய காலத்திலே தப்பாது பொழிகிறது; காட்டிடத்தே தொகுதி கொண்ட இளமை பொருந்திய பிணைமான்கள் தத்தம் ஆணொடு கூடி இனிது செல் கின்றன: பறவைகளும், வண்டினமும் மரக்கிளைகளிலிருந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவும் உண்டலாற் குறைவு படாதனவாயுள்ளன. பசுமந்தைகள் புல்லை மேய்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன. வறுமை யென்னும் வாட்டத்தை யறியாத வளம் பொருந்திய சிறப்பினால் பெரிய பலவாகிய புதுப் புதுக் கூலங்கள் பெருக நாடு நாடாக விளங்கிற்று என்று பெருங்குன்றுர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை விருந்தோம்பிய நாட்டினை இனிதின் கிளத்துவர்: வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளு மிஞ்று மாச்சினை யார்ப்பப் பழனுங் கிழங்கு மிசையற வறியாது பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை வறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும." மேலும், பெருங்குன்றுார் கிழார், விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க மழை தப்பாது சேர நாட்டிற் பொழிந்து செல்வ வளத்தை மிகுவிக் கின்றது என்றும் கூறியுள்ளார். == 29. பதிற்றுப்பத்து 9 8 : 40.42. 30. பதிற்றுப்பத்து; 9 : 1.7.