பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப. ! இதுகாறும் கூறியவாற்றான் சேரநாடு நானில வளமும் நன்கியைந்தது என்பதும், மழை வளம் மட்டின்றிக் கொண்டிருப்பது என்பதும், மக்கள் புதுவருவாய் காரண மாக மாறா மகிழ்ச்சியில் திளைத்து விழவயர்ந்து வாழ்வர் என்பதும் விளங்க அறியப்பட்டன. மக்கள் வாழ்க்கை சேர நாட்டு மக்கள் பிறர் பொருளைச் சிந்தையாலும் விரும்பாதவர்கள்; குற்றமற்ற அறிவு சான்ற நெஞ்சினர்; செம்மையின் இகவாது நன்மைக்கண் தங்குபவர்கள்; அன்பு நெறி பற்றி அருள் நெறி நிற்பவர்கள்; பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்பினர்; கடமை நினைந்து பணி யாற்றிய செம்மை சிறந்த வாழ்வினர். விழவு மலிந்த வீர வாழ்வினர். மலையிலே பிறந்து கடலிலே கலக்கும் நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்படும் இனிய புனலாட்டு விழாவும், சோலையிடத்தே தங்கி இனிதிருந்து செய்யும் வேனில் விழாவுமுடைய பெரிய அழகிய வாழ்க்கையினை விரும்பிச் சூழும் சுற்றத்தாருடன் இன்பப் பகுதி பலவும் துய்க்கும் செல்வ மக்கள் சேர நாட்டில் மிகுதியும் உள்ளனர்: நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும் மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவிற் பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை மேவரு சுற்றமொ டுண்டினிது நுகரும்.” மேலும், போரில்லாக் காலங்களில் சேர நாட்டு வீரர், பகைப்புலத்தே பகைவர் ஊர்ந்துவந்த களிற்றினைக் கொன்று கொணர்ந்த அவற்றின் வெண்கோடுகளைக் 31. பதிற்றுப்பத்து; 9 9 10-1. 32. பதிற்றுப்பத்து, 5 ; 8 13.16.