பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 கள்ளிற்கு விலையாகத் தந்து, கள்ளைப் பெற்று மகிழ்ந்து, அச்சத்தை அறியாத இன்பமே நுகரும் வாழ்க்கையை யுடைய உத்தர குருவில் வாழும் மக்களைப் போல நாடோறும் இனிய உவகை பொருந்த வாழ்கின்றனர்: வேந்துார் யானை வெண்கோடு கொண்டு கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன் அருங்கள் கொடைமை தீர்ந்துபின் மகிழ்சிறந்து நாம மறியா வேம வாழ்க்கை வடபுல வாழ்நரிற் பெரிமதர்ந் தல்கலும் இன்னகை மேய பல்லுறை பெறுப.: சேர நாட்டின் கொல்லிமலைச் சாரலில் வாழும் மக்கன் முழவு போன்ற பெரிய பலாப்பழத்தை உண்டு, மூங்கிற் குழாயிற் பெய்து முற்றிய கள்ளை அருந்தி, ஆரவாரம் மிகுந்து விழாவயர்கிறார்கள்; இரவலர்க்கு வழங்குகிறார்கள்: முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் கலிமகிழ் மேவலர் இரவலர்க் கீயும்.: பூண் தோய்ந்த உலக்கை கொண்டு உலையிலிடும் அரிசியைத் தீட்டுகின்றனர். அடையினையுடைய சேம்பு போன்று சோறு சமைக்கும் பெரும்பானையுளது. கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால் ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக்கட்டை காண்பார் மதியை மருள்விக்கின்றது. உண்ணவும் தின்னவும் வருவார்க்குச் சோறு குறைவுபடாது வழங்கப்படுதலின் சமையல் இடை யறாது நடந்துகொண்டிருக்கின்றது. இத்தகு புது வருவா யினை உடையதாகச் சேர நாடு திகழ, மக்களும் யாவரும் 33. பதிற்றுப்பத்து; 8, 8 : 9.14. 34. பதிற்றுப்பத்து; 9, 1 : 19-23.