பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 60 கண்டு மதிமருளும் வாடாச் சொன்றி மிசைந்து வாழ் கின்றனர்: * உண்மருந் தின்மரும் வரைகோ ளறியாது குரைத்தொடி மழுகிய வுலக்கை வயின்றோ றடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின் எ.குறச் சிவந்த ஆனத் தியாவரும் கண்டுமதி மருளும் வாடாச் சொன்றி. : மருத வளம் நிறைந்த விரிந்த விளைபுலங்களாகிய கழனியின் கண்ணே மீன் இரை நோக்கி நிற்கும் நாரைகளை ஒட்டும் மகளிர் இரவு பகலென்ற இரு போதுகளிலும் தாமணிந்துள்ள பசிய பொன்னாற் செய்த இழைகளைக் களையாமல், புதிய புதிய குரவைக் கூத்தினை நிகழ்த்தி மகிழ்வர். மருதஞ் சான்ற மலர்தலை விளைவயிற் செய்யுள் நாரை யொய்யு மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை யயரும்.' இரவும் பகலும் அணிகளைக் களையாமல் மகளிர் எந் நேரமும் அணிகலன்கள் அணிந்து அழகுற விளங்கும் செயல் அந்நாட்டு மகளிரின் செல்வ வளனைச் சிறக்கக் குறிக்கக் காணலாம். உணவு வகைகள் அரிவாளாற் பிளந்து அறுக்கப்பட்ட வெள்ளிதாகிய ஊனினது கொழுவிய இறைச்சியும், ஆட்டிறைச்சி பெய்து சமைத்த வெண்னெல்லின் வெண்சோறும் உண்டு, தேனை மூங்கிலடத்தே பெய்து, அதனுள் இஞ்சிப் பூ முதலிய மலரரும்புகளை யிட்டுப் பக்குவம் செய்து தெளிவித்துக் கொள்ளும் தேறலினை மாந்தி மகிழ்கின்றனர் சேர 35. பதிற்றுப்பத்து 3; 4 : 18-22. 36. பதிற்றுப்பத்து 8, 3 : 4.9,