பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.1 நாட்டு மக்கள் என்பது குமட்டுர்க் கண்ணனார் கூற்றால் தெரியவருகின்றது. எ.குபோழ்ங் தறுத்த வானினக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெஞ்சோறு நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி. * கள்ளை உண்பீராக; சோற்றைச் சமைப்பீராக; தின்னப்படும் ஊன் கறியை அறுப்பீராக; புழுக்குதற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுவீராக’ என்ற பாணன் கூற்றால் கள், சோறு, இறைச்சி, கறிவகைகள் உணவின் கூறுகளாக அந்நாளில் துலங்கின என்பது தெளிவு. உண்மின் கள்ளே அடுமின் சோறே எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே." அடுத்து, ஊனை வெட்டும் மனைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி வேகவைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலி போன்று அமையாது ஒலித்தது என்று பாலைக் கெளதமனார் பாடுவது கொண்டு இறைச்சி யுணவு அந் நாளில் மக்கள் உணவில் பெற்ற இடம் தெளிவாகப் புலனா கின்றது: ஊனத் தழித்த வானினக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்ப." பாலைக் கெளதமனார் என்னும் இவ் அந்தணப் புலவரே இப்பாட்டிலேயே கள்ளுணவைப் பற்றிக் குறிப் பிட்டுள்ளார்: ஆர்வளம் பழுணிய வையங் தீர் சிறப்பின் மாரியங் கள்ளின். " 37. பதிற்றுப்பத்து; 2; 2 : 16-18. 38. பதிற்றுப்பத்து, 2, 8 : 1.2. 39. பதிற்றுப்பத்து; 3; 1 : 10-11. 40. பதிற்றுப்பத்து; 3, 1 : 16.17. சே. செ. இ-11