பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 மழை போல் கள் சொறியப்படுகின்றமையால் கள் மக்கள் வாழ்வில் பெற்ற இடம் பெரிது என்பது தெரிய வருகின்றது. தன்னிற் கலந்த சிவந்த ஊன்கறி தோன்றாதவாறு செய்த, து வ ைர யா ல் அரைக்கப்பட்ட வெள்ளிய துவையலையும், வெண்மையான இறைச்சி கலந்தமைத்த சோற்றையும் சேர நாட்டு மழவர் குலப் பெருமக்கள் உண்பதாகக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் குறிப்பிடுவர்: செவ்வூன் தோன்றா வெண்குவை முதிரை வாலூன் வல்சி மழவர்.' இதுகாறும் கூறியவற்றால் சோறும் இறைச்சியும் மக்கள் உணவு என்பதும், கள் குடி வகை என்பதும் விளக்க முறுகின்றன. o)_ бO I_ அக்கால மக்களின் உடை குறித்த குறிப்பு இரண்டாம் பத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றால் புலனாகின்றது. மழையால் நனைந்த பருந்தினுடைய ஈரம்பட்ட சிறகை யொப்பக் கிழிந்த, மண்படிந்து மாசேறிய கந்தை யாகிய உடையை நீக்கி, நூற்கப்படாத நூலாகிய பட்டா வியன்ற ஆடையை வாலிதாக இடுப்பில் உடுத்திக் கொள்ள இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இரவலர்க்கு ஈந்ததாகக் குறிப்பு வந்துள்ளது: நீர்ப்படு பருந்தின் ஈர்ஞ்சிற கன்ன நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளி.இ.: 41. பதிற்றுப்பத்து: 6; 5 : 7–8. 42. பதிற்றுப்பத்து, 2, 2 : 19-21.