பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மேற்காணும் குறிப்புகள் அக்கால மகளிர் அணி கலன்கள் அணிந்து அழகுற விளங்கினர் என்பதைக் காட்டும். மகளிர் பதிற்றுப்பத்து முழுவதும் மகளிர் அழகும் பண்பும் செயலும் பாராட்டப்படுவதனைக் காணலாம். சுருண்டு கருத்த கூந்தலும் வளைந்த மூங்கில் போன்ற தோளும் உடைய குற்றமில்லாத மகளிர் என்று அவர்கள் போற்றப்படுகின்றனர்: வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர். 2 அடுத்து அவர்கள் ஒளிவிடும் அணிகலன்களை அணிந்து அழகுற விளங்குவதாகக் கூறப்பட்டுள்ளனர்: ஒள்ளிழை மகளிர். ' விண்ணுலகத்து மகளிர் தம் நலத்தால் தமக்கு நிகராதல் வேண்டித் தம்முள் மாறுபட்டு இகல் கொள்ளும் மெய்ந்நலமும், விளங்குகின்ற தலைக்கலனால் மறைப் புண்ட வண்டு மொய்க்கும் கூந்தலும், நீராடுதலால் நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய செவியிடத்தே பெய்த வளைந்த குழையும் உடையவர்களாக மகளிர் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர்: வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை. ! மகளிர் மகிழ்ச்சியோடு விளையாட்டில் ஈடுபடுவது பிறிதொரு பாடலில் பேசப்படுகின்றது. வயலித்தே 52. பதிற்றுப்பத்து 22:22-23. 53. பதிற்றுப்பத்து ; 2 3 : 21. 54. பதிற்றுப்பத்து ; 2 : 13.15.