பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 மகளிர் அவலிடித்த உலக்கையை வாழைமரத்தில் சார்த்தி விட்டு, வளையல் அணிந்த இளைய மகளிர் வள்ளைப் பூக்களைப் பறிப்பதில் ஈடுபடுகின்றனர்: அவலெறிந்த உலக்கை வாழைச்சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளைவயல்." பிறிதொரு பாடலில் வளையல் அணியாத இள மகளிர் பேசப்படுகின்றனர். வளையல் அணியாத அவ் இளைய மகளிர் வெள்ளிய சிறு பறவைகளை யோப்பித் திரிகின்றனர்; இடையறாத விழாக்களில் மனம் களிக் கின்றனர்: வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும் அழியா விழவு." மகளிர் தம் இயற்கைக் கூந்தலோடு செயற்கை மயிரினையும் இட்டுப் புனைந்த செய்தி ஐந்தாம் பத்தில் அ ைம ந் துள்ள பாடலொன்றால் அறியப்படுகின்றது. கவரிமான் மயிர் கலந்து முடித்த கொண்டையினையும், கரிய மேகம் போன்ற கூந்தலினையும், ஊசலாடும் விருப்பத் தினையும், செவ்விய இழைகளையுமுடைய மகளிர், உரல் போன்று பெரிய காலையும் ஒளிவிடும் கொம்பையும் பெரிய கையையும் மதம் நிறைந்த நடையையும் உடைய யானைகளை விரும்பிக் குழியில் அகப்பட்டுக் கொள்ளும் பிடிகளின் தொகையினை ஒன்று இரண்டு என்று விரல் விட்டு எண்ணத் தொடங்கிப் பின் அவற்றின் தொகை எண்ணிக்கைக்கு அடங்காமையால் எண்ணு முறையைக் கைவிடுகின்றனர்: கவரி முச்சிக் கார்விரி கூந்தல் ஊசன் மேவற் சேயிழை மகளிர் 55. பதிற்றுப்பத்து 3 9 : 1-3. 56. பதிற்றுப்பத்து 3 6 : 6-7.