பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 உரல்போற் பெருங்கா லிலங்குவாண் மருப்பிற் பெருங்கை மதமாப் புகுதரி னவற்றுள் விருந்தின் வீழ்பிடி யெண்ணு முறைபெறா. ' பரணரின் இப் பாடலால் அக்காலத்துப் பெண்களுக் கிருந்த அஞ்சாமை தெரியவருகின்றது. பிறிதொரு பாடலில் பரணர் மகளிரின் அழகுச் செவ்வியை அழகுறப் புனைந்துள்ளார். இழையினையும் குழையினையும் நறிய தண்ணிய மாலையினையும் ஒளிமிக்கு விளங்குகின்ற தொடியைச் செறிவாக அணிந்த முன் கையினையும், ஒளி மிகுந்து திகழும் அழகிய மணிமாலை கிடந்து விளங்கும் மார்பினையும், வண்டு மொய்க்கும் கூந்தலைக் கொண்டையாக முடித்து அழகு பிறங்க ஒளிரும் பாடல் மகளிர் பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத முறைமையுடன் கூடிய உழிஞைச் செயலைப் புகழ்ந்து பாடுகின்றனர்: இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்கிமி ரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபின் உழிஞை பாட." பொய்யா நாவிற் கபிலர் பிரிவுத் துயரத்தை ஆற்றாது காதல் மகளிர் கொள்ளும் வருத்தத்தினை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றார். தலைவனின் լԴrf வாற்றாது உறக்கம் கொள்ளாது, தாம் அணிந்துள்ள பசிய இழைகள் நெகிழ்ந்து நீங்க உடல்மெலிந்து, உயரிய மண்ணால் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த நீண்ட பெரிய மனையிடத்தே ஒவியத்தில் தீட்டிக் காட்டப்படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில், தலைவன் பிரிவின்கண் = 57. பதிற்றுப்பத்து : 5 : 3 : 1-5. 58. பதிற்றுப்பத்து ; 5 ; 6 : 1.6.