பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாள்கள் பலவும் எழுதியெழுதி இயல்பாகவே சிவந்து தோன்றும் விரல் மேலும் சிவந்து தோன்ற, அழகிய வரிகளையும் சிலம்பை யும் காண்பாரை வருத்தும் அழகையும் கொண்டு அரிவையர் துலங்குவதாக ஒர் அழகிய சித்திரமே தீட்டித் தலைவி, தலைவன் பிரிவால் கொண்ட ஆராத் துயரினைப் புலப்படுத்துகின்றார்: பாய லின்மையிற் பாசிழை நெகிழ நெடுமண் இஞ்சி நீணகர் வரைப்பின் ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச் செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல் அணங்கெழி லரிவையர். ' தலைவனைப் பிரிந்த தலைவி அவன் பிரிந்த நாட் களைச் சுவரில் கோடிட்டுக் குறித்துவருதல் மரபென்பது, நாளிழை நெகுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல் வாழி தோழி" என வரும் அகப்பாட்டானும் அறியலாம். வயல் வளம் சார்ந்த மருத நிலங்களில் நீர் நிறைந் துளது. நீரில் காணும் மீனை உண்ணும் பொருட்டு நாரைகள் பறந்து வந்து அமர்கின்றன. அந் நாரைகளை ஒலியெழுப்பி ஒட்டுகின்றனர் பெண்கள். அவர்கள் செல்வ மகளிர். இரவானாலும் பகலானாலும் அவர்கள் தாம் அணிந்துள்ள பசிய அணிகலன்களை அகற்றுவதில்லை. அந் நாட்டில் புதுவருவாய் மிகுதி. எனவே மகளிர் மகிழ்வுடன் குரவைக் கூத்து நிகழ்த்தி மகிழ்கின்றனர். இப்படி ஒர் அழகிய சித்திரத்தினைத் தீட்டிக் காட்டு கின்றார் புலவர் அரிசில் கிழா : 59. பதிற்றுப் பத்து 7 ; 8 : 15.19. 60. அகம் , 61 : 4.5.