பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற் செய்யு ணாரை யொய்யு மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும்பல் யாணர்க் குரவை யயரும். ' மகளிர் நீராடும் நேர்த்தியினைக் காட்டுகின்றார் பெருங்குன்றுார் கிழார். ஒடக்கோல் நிற்கமாட்டாத ஆழ முடைத்தாயினும் ஆண்டுள்ள வானியாற்று நீரில் மகளிர் பாய்ந்து விளையாடுகின்றனர். அதுபோது அவர்கள் காதில் அணிந்து கொண்டிருந்த பொன்னாற் செய்த குழையானது ஆற்று நீரின் ஆழத்தில் விழுந்துவிடுகின்றது. இருப்பினும் சந்தன மரங்கள் மிதந்துவரும் வானியாறு தெளிவான நீரைக் கொண்டுள்ள காரணத்தால் மகளிர் காதினின்றும் கழன்று விழுந்த அப் பொற்குழை மேலே நன்றாகத் தெரிகிறது. எனவே வானியாற்று நீர் பளிங்கு போல் தன்னகத்துப்பட்ட பொருளை இனிது புலப் படுத்தும் என்பது பெறப்படுகின்றது: கழைநிலை பெறா அக் குட்டத் தாயினும் புனல்பாய் மகளிர் ஆட வொழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும். சாந்துவரு வானி நீர். ' புனலிற் பாய்ந்தாடும்பொழுது மகளிர் காதிற் செறிக்கப்பட்டிருக்கும் குழை நீரில் விழுதல் இயல் பென்பதனை, வண்ட லாயமொ டுண்டுறைத் தலை இப் புனலாடு மகளி ரிட்ட பொலங்குழை.98 என்னும் பெரும்பாணாற்றுப் படை அடிகளால் அறியலாம். 61. பதிற்றுப் பத்து 8 ; 3 : 4.7. 62. பதிற்றுப்பத்து 9 ; 6 9.12. 63. பெரும்பாணாற்றுப்படை 311-312.