பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 அரசமாதேவி அரசமாதேவியின் பண்புகள் பதிற்றுப் பத்தில் அழகுறச் வித்திரிக்கப்பட்டிருக்கக் காணலாம். தேவ உலகத்தில் வாழும் மகளிரும் அரசமாதேவியின் அழகு கண்டு மாறுபாடு கொள்கின்றனர். இழைகள் மறைந்திருக்கும் தலைமுடியில் வண்டுகள் தங்கியுள்ளன. அலை அலை யாகச் சுருண்ட கூந்தலும் வளைந்த குழையும் கொண்டு அரசமாதேவி காட்சி தருகின்றாள்: வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை." மேலும் அவள் ஆறிய கற்பும், அடக்கம் பொருந்திய மென்மையும், ஊடற் காலத்திலும் இனிமையான மொழி களையே பகரும் இனிய முறுவலும், அமுதம் நிரம்பிய சிவந்த அழகுத் திருவாயும், உள்ளத்து வேட்கையை ஒளிப்பின்றிக் காட்டும் அமர்த்த கண்களும், ஒளிவிளங்கு நெற்றியும், அசைந்த நடையை யுடையவளுமாகச் சேரனின் பட்டத்துத் தேவி காட்சியளிக்கின்றாள். புலவர் தீட்டும் அவ் வழகு ஒவியம் வருமாறு: ஆறிய கற்பின் அடங்கிய சாயல் ஊடினும் இனிய கூறும் இன்னகை அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற் சுடர்நுதல் அசைநடை." சேரமான் வினைமேவிய உள்ளத்தனாய்ப் பாசறையின் கண் தங்கியிருக்க, அவன் பிரிவை ஆற்றாத தலைவி பகற் பொழுதில் அவன் பிரிவைப் பெரிதும் ஆற்றியிருந்து, இரவின்கண் அரிதாகத் துயில் பெறுகின்றாள். அரிதாகப் பெற்ற அவ் வுறக்கத்தில் சிறு மகிழ்ச்சி காரணமாக __ _ 64. பதிற்றுப்பத்து 2 4 13-15. 65. பதிற்றுப்பத்து ; 2 : 6 10.14.