பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 உயிரைத் தாங்கி மனைக்கண் உறையும் பெரிய சால்பும், உடல் சுருங்கியதனால் எழும் அலரால் நாணம் நிறைந்த உடம்பும் ஒளி பொருந்திய நெற்றியும் உடையவள் என்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வாழ்க்கைத் துணைவி கூறப்பட்டுள்ளாள்: எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும் கனவினுள் உறையும் பெருஞ்சால் பொடுங்கிய நாணுமலி யாக்கை வாணுதல் அரிவை." மண்ணுதல் செய்யாத நிலையிலும் நறுமணமே கொண்டு, மண்ணிய வழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும் குளத்தில் நாளத்தின் நீங்கியன போல இரவுப்போதிலும் மலர்ந்து நின்று, அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும், அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர் வரும் யாற்றின் கரை மருங்கே நின்ற மூங்கிலை ஒத்த பருத்த தோளையுமுடைய தேவியாகப் பல்யானைச் செல்கெழு குட்டுவனின் பட்டத்துத் தேவி பாாாட்டப் பெறுகின்றாள். மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுங் தாழிருங் கூந்தல் ஒரீஇயன போல விரவுமலர் நின்று திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண் அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து வேயுறழ் பணைத்தோள் இவள்." களங்காய்க் கண் ணி நார்முடிச் சேரலின் பக்கல் அமர்ந்த பட்டத்துத் தேவியும் காப்பியாற்றுக் காப்பியனா ரால் கவினுறக் கிளத்திக் கூறப்பெற்றுள்ளாள். வண்டு மொய்கத் தழைத்த கூந்தலையும், மனை யறத்திற்குரிய 66. பதிற்றுப்பத்து 2; 9 : 1.1.14. 67. பதிற்றுப்பத்து : 3, 1 : 32.37.