பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 அறம் பலவும் கற்றுத் தெளிந்த அறிவும் செயலும் உடைய கற்பும், காதிலனிந்த குழைகட்கு விளக்கத்தை நல்கும் ஒளி பொருந்திய நெற்றியையும், தான் அணிந்த பொன்னாற் செய்த இழைகட்கு விளக்கந் தரும் மேனியை யும், அழகிய வளைந்த உந்தியையுமுடைய பழைய பெரு மனையிடத்தே உறையும் அரசமாதேவி, விண்ணுலகத்தே இயங்கும் மகளிருள்ளே சிறந்தவளான சிவந்த விண்மீனாகிய அருந்ததி போன்ற கற்பினள் என்று புலவரால் பலபடப் பாராட்டிப் பேசப் பெறுகின்றாள் :

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * வண்டுபட

ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின் குழைவிளக் காகிய வொண்ணுதற் பொன்னின் இழைக்குவிளக் காகிய வவ்வாங் குந்தி விசும்புவழங்கு மகளி ருள்ளுஞ் சிறந்த செம்மீன் அனையகின் தொன்னகர்ச் செல்வி." சேரன் செங்குட்டுவனின் பெருந்தேவியாகிய இளங்கோ வேண்மாள் பெரும் புலவர் பரணரால் சிறப்பாகப் பாராட்டப் பெற்றுள்ளாள்.

பூசிய சந்தனம் புலரவும், நெற்றியிலிட்ட பொட்டும் கண்ணிலிட்ட மையும், பிறவு வண்ணங்கள் நீங்க, பல்வகை யாகக் கை புனையப்பட்ட அழகு பொருந்திய வரிகளை யுடைய வண்டினம் ஒலிக்கும் நின் (செங்குட்டுவன்) மார்பி னால் பிணிக்கப்பட்ட மகளிரது விரிந்த மெல்லிய கூந்த லாகிய மெல்லிய படுக்கையிலே கிடந்து, மிக வருத்தம் பயக்கும் காம வேட்கை மிகுதலால் மார்படைய முயங்கும் முயக்கத்தால் இராப்பொழுதைப் பயன் கொள்ளும் முறைமையினையுடைய சிறு துயிலும் பெறாதொழியுமாறு பன்னாளும் கழியுமோ?' என்று மன்னனைப் பார்த்துப் புலவர் பரணர் பாடும் பாட்டால் கூடற்காலத்தில் அரச மாதேவி பெறும் நிலை வருணிக்கப்படுகின்றது.

68. பதிற்றுப்பத்து 4 : 23.28.