பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 를 를 를 를 를 를 를 를 를 를 를 들 சாந்துபுலர்பு வண்ணம் விே வகைவனப் புற்ற வரிஞiமி றிமிரு மார்புபிணி மகளிர் விரிமென் கூந்தன் மெல்லணை வதிந்து கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப் பொழுதுகொண் மரபின் மென்பினி யவிழ வெண்பல கழியுமோ பெரும பன்னாள்.98 பெண்பாற் புலவராம் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் பட்டத்துத் தேவி அவன் மீது கொண்ட ஒர் அழகிய ஊடல் நாடகத்தை உணர்ச்சித் ததும்பக் குறிப்பிட்டுள்ளார். ஒளிர்கின்ற கால் விளக்கின் திருவிளங்கும் ஒளியிலே, முழவு முழங்க ஆடும் துணங்கைக் கூத்தின் கண் கை பிணைந் தாடும் மகளிர்க்குக் கைகோத்துக் கொள்ளும் புணையாகச் சிலைத்தலையுடைய வலிய ஏற்றினைப் போலச் சேரமான் முதற்கை கொடுத்தனன். அசைகின்ற மாலையையும் பரந்த தேமலையும் குளிர்ந்த இமைகள் பொருந்திய குளிர்ந்த கண்களையும் பெரிய இயல்பையுமுடைய அரசனின் உரிமை மனைவி ஊடல் கொண்டாள். எனவே, ஒள்ளிய இதழ் விரிந்த பூவை நிகர்த்த அடிகளிலே அணிந் துள்ள இரண்டாகிய பல மணிகள் கோத்த கிண்கிணி யானவை சிறிய பாட்டின்கண் கிடந்து ஒலிக்க, கரையை அலைக்கும் நீர்ப் பெருக்கால் அசையும் தளிர் போலத் தான் கொண்ட வெகுளி காரணமாக வாயிதழ் துடிப்ப நடுங்கி நின்று, மன்னன்மேல் எறிதற்காக வோச்சிய சிறிய செங்குவளை மலரை, ஒருவரிடமும் சென்று இரந்து அறியாத மன்னன் மனம் நெகிழ ஈவாயாக என இருகையும் விரித்து இரக்கவும் அதற்கு உடன்படாது சிவப்பும் ஆறாது, 'நீ என்பால் அன்புடையன் அல்லை என்று கூறி அவ்விடத் தினரின்றும்-அரசன் முன்னின்றும் நீங்கினாள் : _ 69.-பதிற்றுப்பத்து 5; 10:16-21.