பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து முழாவிIழ் துணங்கைக்குத் தழுஉப் புணையாகச் சிலைப்புவல் லேற்றிற் தலைக்கை தந்துே நளிந்தனை வருத லுடன்றன ளாகி உயவுங் கோதை யூரலந் தித்தி ஈரிதழ் மழைக்கட் பேரிய லரிவை ஒள்ளித ழவிழகங் கடுக்குஞ் சீறடிப் பல் சில கிண்கிணி சிறுபர டலைப்பக் கொல்புனற் றளிரி னடுங்குவன னின்றுகின் எறிய ரோக்கிய சிறுசெங் குவளை ஈயென விரப்பவும் ஒல்லாள் நீயெமக்கு யாரை யோவெனப் பெயர்வோள்.'" சிறு செங்குவளை யென்றதற்குத், தான் எறிதற் கோக்கிய சிறியதொரு செங்குவளையெனச் சிறுமையால் அவள் மென்மை கூறிய சிறப்பான் இதற்குச் சிறு செங் குவளையென்று பெயராயிற்று' என்று கூறுவர் பதிற்றுப் பத்தின் பழையவுரைகாரர். இம்மையிற் புகழும் மறுமையிற் பேரின்பமும் பயக்கும் பெறலரும் பேறு மக்கட்பேறு. இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் . என்று அகப்பாடல் மக்கட்பேற்றின் சிறப்பினை அழகுறக் காட்டும். பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற என்றார் திருவள்ளுவர்.

70. பதிற்றுப்பத்து; 6, 2 : 13-24. 71. அகம்; 66 : 1.4. 72. திருக்குறள்; மக்கட்பேறு : 1.