பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 இளமையும் துணையாகும் தன்மையுமுடைய மக்க ளாகிய நற் செல்வத்தைப் பெற்றெடுத்த வளமை பொருந்திய சிலம்பையும், அடக்கத்தால் உயர்ந்த ஒழுக்கத் தையும், நிறைந்த அறிவையும், குணஞ் செயல்களால் உண்டாகிய கெடாத புகழையுமுடைய ஒள்ளிய நெற்றி யினராகிய காதல் மகளிர், புலவியாற் சீறி நோக்கும் பார்வையினர் என்று ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அருமைத் துணைவியின் ஊடற் குறிப்பினை மேலும் காக்கை பாடினியார் பிறிதொரு பாடலில் குறிப் பிட்டுள்ளார்: இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆன்ற வறிவிற் றோன்றிய நல்லிசை ஒண்ணுதல் மகளிர் துணித்த கண். * ஒவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின்கண்ணே யிருக்கும் பாவை போன்று நல்ல அழகும் குணமும் உடையவள் என்று செல்வக் கடுங்கோ வாழியாதனின் செல்வ மனைக்கிழத்தியைக் கபிலர் குறிப்பிட்டுள்ளார்: ஒவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன். : இது மட்டுமன்று; செல்வக் கடுங்கோ வாழியாதன் இத்தகு நலம் நிறைந்த மனைவிக்குக் கணவன் என்று குறிப்பிடப் பெறுகின்றான். மனைவி வழிக் கணவனுக்குப் பெருமை தோன்றுவதனை நல்லோள் கணவன்' என்ற தொடர் விளக்கி நிற்றல் காண்க. திருமுருகாற்றுப்படை யிலும் நக்கீரர் பெருமான் திருமுருகப் பெருமானைக் குறிக்குமிடத்து, 73. பதிற்றுப்பத்து; 6, 7 10.13. 74. பதிற்றுப்பத்து; 7; 1 : 3.4.