பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 75 மாசில் கற்பின் வாணுதல் கணவன்" என்று குற்றமற்ற கற்பும் ஒளி பொருந்திய நெற்றியுமுடைய தெய்வயானையின் கணவன் என்றே கூறிப் பெண் ணிற்குப் பெருமை தந்துள்ளார். பிறிதொரு பாடலிலும் கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனை இம் முறையிலேயே பாராட்டியிருக்கக் «ьтёттsvгтLһ. இழையணிந்து உயர்ந்த ஒப்பனை செய்தாற் போல் வருகின்ற இளமுலையினையும், மாட்சிமைப்பட்ட வரி களையுடைய அல்குலினையும், அகன்ற கண்ணினையும், மூங்கிலைப் போன்ற அழகிய பெரிய மூட்டுக்கள் பொருந்திய தொடியணிந்து பிறங்கும் பருத்த தோளினை யும், அழகிய கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினை யும், சேய்மைக் கண்ணும் சென்று மணம் கமழும் நறிய நெற்றியினையும் செவ்விய அணிகலன்களையும் உடை யாட்குக் கணவன் என்று சேரமன்னன் சிறப்பிக்கப் பெறுவதனைக் காணும்போது, சேரமாதேவி பல்வகை நலனும் நிறைவும் பாங்குறக் கொண்டு மிளிர்ந்தாள் என்பது அங்கை நெல்லிக் கனியெனப் புலனாகின்றது: பூண்ணிங் தெழிலிய வனைந்துவர லிளமுலை மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின் வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட் காமர் கடவுளு மாளுங் கற்பிற் சேணாறு நறுநுதற் சேயிழை கணவ. பிறிதொரு பாடலில் செல்வக் கடுங்கோ வாழியாதன், நாணம் நிறைந்து, பெரிய மடன் என்னும் குணம் நிலை பெற்று, கற்புநெறிக்கண்ணே தங்கின, மணம் கமழும் ஒளி நிறைந்த நெற்றியினையுடைய உயர்ந்தவட்குக் கணவன் என்று கபிலரால் பாராட்டப் பெற்றுள்ளான்: 75. திருமுருகாற்றுப்படை; 5. 76. பதிற்றுப்பத்து; 7; 5 : 6.10.