பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பெண்மை சான்று பெருமட நிலை இக் கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ." திருமகட்குரிய உருவும் பிற நலங்களும் பொருந்திப் பிறப்பொன்றினால் மட்டும் வேறுபட்ட நல்ல தோளினை யும், ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலினையும் உடையவள் என்று அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் இல்லக் கிழத்தியைப் பாராட்டியுள்ளார்: நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல். ஒன்பதாம் பத்துப் பாடிய பெருங்குன்றுார் கிழார் இளஞ்சேரல் இரும் பொறையிடம் ஒருகால் பின்வருமாறு மொழிந்தார்: இருவாட்சிப் பூக்களுடன் பச்சிலையைத் தொடுத் தணிந்து, மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளி திகழும் அணிகளையுடைய தோழியர் கூட்டம் புடைசூழவுள்ள, தன் நிறம் மறையும்படியான வண்டு மொய்க்கும் கூந்தலும், முன் மயிரின் சுருள் தவழும் ஒளி பொருந்திய நெற்றியும், முறையே பூவாலும் ஒளியாலும் அழகு மிகுதிப் படுமாறு, வளைந்த குழையொடு பொருத நோக்கினையும், தன் பெருங்குணங்கட்கு ஏற்ப அமைந்த மென்மை வாய்ந்த சொல்வினையும், அழகிய முகத்தையும் மாட்சி மைப்பட்ட அணிகலன்களையுமுடைய அரிவையாகிய நின் தேவியைக் காண்பதற்காக ஒரு நாளேனும் நின்னுடைய குதிரை பூட்டிய தேரில் ஏறுவாயாக." பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத் 77. பதிற்றுப்பத்து: 7, 10 : 14.16. 78. பதிற்றுப்பத்து; 8; 4 : 16.17.