பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கி ரோதி யொண்ணுத லணிகொள பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து மாணிழை பரிவை காணிய வொருங்ாட் பூண்க மாளகின் புரவி நெடுந்தேர்." இப்பகுதியில் அரசமாதேவியின் அழகு நலம் தோற்று தல் காணலாம். பெருங்குன்றுார் கிழாரும் கபிலர் போன்றே இளஞ்சேர லிரும்பொறையின் இல்லக்கிழத்தியின் மாண்புகளைப் புகன்று, பின் அத்தகு நல்லாளுக்குக் கணவனே என்று இளஞ்சேரலிரும்பொறையை விளித்துப் பாடியுள்ளார். -ஒவியத் தெழுதினாற் போன்ற உருவமைந்த நெடிய அரண்மனைக் கண்ணே கொல்லிப்பாவை போலும் அழகுத் திரட்சியமைந்த உரிமை மகளிரின் நடுவே, திசையெல்லாம் ஒளி விளங்கக் கரிய வானத்தே உயர்ந்து செல்லும் கதிரவன் போலப் பல காலம் விளங்கி வாழ்வாயாக!...... H + = கற்புடைமையாலுண்டாகிய நல்ல புகழானது நெடுந் தொலைவு சென்று பரவிய செவ்விய இழைகளை யணிந் தாட்குக் கணவனானவனே! நீ நெடிது வாழ்வாயாக!' ஒவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப் பாவை யன்ன மகளிர் நாப்பண் S S S S S S S STTTTTTSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ. " தன் மனைவியின் கற்பு பிறரால் புகழப்படும் கற்பாதலின், அக் கற்பினை யுடையாட்குக் கணவன் என்ற வழி அரசனுக்குப் பெருமிதம் தோன்றுதல் காண்க. பிறிதொரு பாடலிலும் அரச மாதேவியின் கற்பு மேம்படப் பேசப்பட்டுள்ளது. அரசனை வாழ்த்து முகத்தான் புலவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 79. பதிற்றுப்பத்து; 9, 1 : 25.32. 80. பதிற்றுப்பத்து; 9, 8 : 28, 29-36. சே. செ. இ.12