பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 “நின்மாட்டு அன்பாலொடுங்கிய மனம் குற்றப்படாது, கனவிலும் நின்னைவிட்டுப் பிரிய ஒருப்படாத உறை யுளொடு, தண்ணிதாகவுள்ள மயிர்ச்சாந்து தடவப்பட்டு நெய்ப்புப் புலராத கூந்தலையும் மணமகளிர் கற்பால் வழிபட்டு நோக்கி, பின்னரும் தன்னை நோக்கித் தம் வாழ் தாளெல்லையை யறியும் நோக்கத்துக்கேற்ப விளங்கும் ஒளியையுடைய அருந்ததி போலும் கற்பினையும், ஒளி பொருந்திய நெற்றியினையு முடைய அரிவையாகிய நின் மனைவியுடன் அழகுற விளங்கி நீ எஞ்ஞான்றும் நோயின்றி வாழ்வாயாக! "

  • * * * * * * * * * * * * * * * * * * * * நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர விேய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின் வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே. :

இப் பகுதிகொண்டு அரசமாதேவியின் அழகுச் செவ்வியும் கற்பு மேம்பாடும் ஒருங்கே சிறந்து பொலி வதைக் காணலாம். ஒன்பதாம் பத்தின் இறுதிப் பாடலில் அரசமாதேவியின் கணவனாக விளங்கும் பேறு பெற்றவனே என்று இளஞ் சேர விரும்பொறை பாராட்டப் படுவதனைக் காணலாம். சேரமாதேவியின் அழகு நலம், செழுமையான பல ஆர்களையுடைய வளமிக்க பல குளிர்ந்த வயல்களைக் கொண்ட காவிரியாற்றால் வளமுறப் படைக்கப்பட்ட நல்ல நாட்டுக் கவினுக்கு உவமிக்கப்படுகின்றது. தொழில் வளம் பொருந்திய சிலம்பினையும், அடக்கத்தைப் 81. பதிற்றுப்பத்து; 9; 9 : 13.20.