பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 பொருளாகக் கொண்ட கொள்கையினையும், சினங் கொள்ளுத லில்லாத அறக் கற்பினையும், யாவரும் தெளிய விளங்கும் நல்ல புகழினையும், வண்டு வந்து மொய்க்கும் கூந்தலினையும், ஒள்ளிய தொடியையு முடையவளாக அரசனின் பேருந்தேவி பேசப்பட்டுள்ளாள். அத்தகு மங்கை நல்லாளுக்குக் கணவனே என்று இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றுார் கிழார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர் பாராட்டுமொழி பகன்றுள்ளதனை, செழும்பல விருந்த கொழும்ப. றண்பனை காவிரிப் படப்பை நன்னா டன்ன வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆறிய கற்பிற்றேறிய கல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ. " இதுகாறும் கூறியவற்றால் சேரர்க்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவியரின் அழகு நலனும், அன்பு மாட்சியும், ஆறிய கற்பும், அடக்க மேம்பாடும், பண்பு நலனும், பலர்புகழ் சிறப்பும் நன்கு புலனாகக் காணலாம். விறலியர் விறல் என்றால் சத்துவம் என்று உரை யெழுதுவர் பேராசிரியர். விறலியர் என்றால் திறல் பட ஆடுவோர். என்பது பொருள். இவர்கள் அக்காலக் கலையுலகப் பெரு மக்களில் ஒர் அங்கம் ஆவர். இவர்களில் ஆண்கள் கூத்தர் என வழங்கப்படுவர். மன்னனையோ வள்ளலையோ நாடிச் சென்று தம் வறுமை நீங்க அவர்களைப் பாடிப் பரிசில் பெறுவர். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும். * 82. பதிற்றுப்பத்து; 9; 10 : 46.50. 83. தொல்; பொருளதிகாரம்: புறத்திணைஇயல். 36,