பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 என்று தொல்காப்பியனார் விறலியாற்றுப் படைக்கு வழிவகுத்துள்ளார். தாம் பெற்ற பெருவளம் பிறரும் பெற வேண்டும் என்ற பெருநோக்கிலே செயல்பட்ட இவர்தம் நெஞ்சப்பாங்கு போற்றுதற்குரியதாகும். வளம் பெற்றவன் முன்னர்த் தான் உழன்ற வறுமைத் துன்பத்தை மறவாது: தற்போது வாட்ட முறுபவனுக்கு வளம் காண வழி சொல்வது என்பது உயரிய உள்ளத்தின் உயர் குணமே யன்றோ! இம்முறையில் சிறப்புப்பெறும் விறலியர் பதிற்றுப் பத்துள் பத்துப் பாடல்களில் : பேசப்பட்டுள்ளனர். விறலியர் இயற்கையில் நல்ல அழகு சான்றவர் ஆவர். உடல் வனப்பு மிகுந்த அவர்கள் செயற்கைப் புனைவும் கொண்டு நலமுறத் திகழ்ந்தனர் என்பதனை, இருள்வண ரொலிவரும் புரியவிர் ஐம்பால் ஏந்துகோட் டல்குன் முகிழ்ககை மடவரற் கூந்தல் விறலியர்' என வரூஉம் பகுதியினால் அறியலாம். இருண்டு கடை குழன்று தழைத்து முடியவிழ்ந்து ஐவகையாய் முடிக்கப் படும் கூந்தலையும், உ ய ர் ந் த பக்கத்தையுடைய அல்குலையும், முகிழ்த்த முறுவலையும், இளமைத்தன்மை யினையும் உடையவர்களாக விறலியர் இப்பாட்டிற் சித்திரிக்கப்பட்டுள்ளனர். இவ் விறலியர் ஆடுகின்ற சிறையையுடைய கின்னரப் பறவையை இசையால் வென்ற யாழ் நரம்பின் இசையுடன் ஒன்றாய் இயைந்து செல்லும் இனிய மிடற்றால் பாடிப் 84. (1) 2; 8: 4-6. (2) 5; 3 : 21-22. (3) 5: 7: 6-8 (4) 5; 9:2. (5) 6; 1:10, 11; 19-20. (6) 6; 4: 3-6. (7) 6: 7 : 5-6. (8) 6; 8 : I. (9) 7; 1 : 16-18. (10) 8; 8 : 1-6. 85. பதிற்றுப் பத்து: 2; 8 : 4.6.