பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 பிடியானைகள் பலவற்றைப் பரிசிலாகப் பெறுவதாகப் பரணர் கூறியுள்ளார்: ஆடுசிறை யறுத்த நரம்புசேர் இன்குரற் பாடு விறலியர் பல்பிடி பெறுக. . மேலும் இவ்விறலியர், மலை மேலிருந்து விழும் அருவி போல மாடங்களின் மேலிடத்திலிருந்து காற்றால் அலைக்கப்படும் கொடிகள் அசையும் தெவிடத்தே நெய் சொரியப்படும் விளக்குச் சுரையின்கண் எரிக்கப்படும் நெய் வழியுமாறு பெய்து நிரப்புதலால் கால் விளக்கினது பருத்த திரியானது பேரொளி காட்டி எரியா நிற்க, நல்ல நெற்றியையுடைய விறலியர் கூத்தாடுகின்றதாகப் பரணர் பிறிதொரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அசைகின்ற கூந்தலையும் அஞ்சுகின்ற இயல்பினை புமுடையவர் விறலியர் என்று விறலியரைப் பரணர் இன்னொரு பாடலில் கிளத்தியுள்ளார்: துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர். ' காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற் புலவர் நடந்தும் அசைந்தும் ஆடலியற்றும் விறலியைக் குறிப்பிட்டுள்ளார். ஒளி திகழும் நெற்றி யினையும், மடப்பம் பொருந்திய பார்வையினையும், மிகுந்த ஒளி விளங்கும் பற்களையும், அமுதம் போன்ற சொற்களைச் சொல்லும் சிவந்த வாயினையும், அசைந்த நடையினையுமுடைய விறலியர் என்று அவர் விறலியரை வருணித்துள்ளார்: இயலின ளொல்கின ளாடு மடமகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றி 86. பதிற்றுப் பத்து: 87. பதிற்றுப் பத்து: 5; 3 : 2 * 5; 9 : 2. 1-22.