பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சுடர்நுதன் மடநோக்கின் வாணகை யிலங்கெயிற் றமிழ்துபொதி துவர்வாய் அசைகடை விறலியர். அவரே பிறிதொரு பாடலில், அகன்ற சந்து பொருந்திய வளையினையும், மூங்கில் போன்ற பருத்த தோளினையும், குளிர்ந்த கண்களையும், உயர்ந்தெழு தலையும், தொய்யில் எழுதப்பட்டு வருதலுமு-ை" இளமுலையினையும், பூத்தொழில் செய்யப்பட்ட உடை யணிந்த அல்குலையும், வ ண் டு பாய்ந்தொலிக்கும் கூந்தலையும், மின்னுகின்ற இழையினையுமுடையவர்களாக விறலியரை வருணித்துள்ளார். வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்: ஏங்தெழின் மழைக்கண் வனைந்துவர லிளமுலைப் பூந்துகி. லல்குற் றேம்பாய் கூந்தல் மின்னிழை விறலியர்." இவர்கள் அரசனின் மறப்புகழைப் பாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.' சிலவாகிய வளைகளை யணிதலும், மென்மையான நிலத்திடத்தவாகிய வழியிலே சிறிய காலடிகளால் நடந்து செல்வதும் விறலியின் செயலாகப் பேசப்பட்டுள்ளது: மெல்லிய வருந்திற் சீறடி யொதுங்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி.' விறலியர் செயல் ஆடுவது என்பதும், பாணர் பொருநர் செயல் பாடுவது என்பதும், இவ்விரு செயல்களும் பரிசிலின் பொருட்டே அமைவன என்பதும் புலனாகின்றன: 88. பதிற்றுப்பத்து; 6, 1 : 10.11 & 19-21. 89. பதிற்றுப்பத்து; 6, 4 : 3.5. 90. பதிற்றுப்பத்து; 6; 4:12-17. 91. பதிற்றுப்பத்து; 6, 7: 5.6.