பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்." நிலாப் போன்று வெண்மையாக ஒளிவிடும் வேலின் வென்றியினைப் பாடியாடுவதாகவும், முழவிசைக் கேற்பத் தாளம் அறுத்திசைத்துப் பாடியாடுமிடம் விழாக்களம் போன்ற மன்னனின் திருவோலக்க மன்றம் என்றும் கபிலர் தம் பாடலொன்றில் குறிப்பிட்டிருக்கக் காணலாம்: நிலவி னன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவின் அன்னநின் கலிமகி ழானே." பெருஞ்சேரல் இரும்பொறையிடம் ஆற்றுப்படுத்தி அரிசில்கிழார் ஒரு பாடல்" பாடியுள்ளார். அப்பாடலில், ஆடுமிடத்து வளை பலவாக இருந்தால் அவை ஒன்றனோடு ஒன்று மோதி உடைய ஏதுவாக இருத்தலின் விறல்படப் பாடியாடு மகளான விறலி சில்வளையே அணிதல் குறித்து சில்வளை விறலி என அழைத்துள்ளமையினைக் காணலாம். - இவ்வாறு பத்துப் பாடல்களில் விறலியரின் வனப்பும் செயலும் பதிற்றுப்பத்துள் விளங்க உரைக்கப்பட்டுள்ளன. கோடியர் கோடியர் என்போர் கூத்தராவர். இவர்கள் விழாக் காலங்களில் கூத்தர் ஊர்க்கண் முழவோசையினை முழக்க, அம் முழவோசையின் தாளத்திற்கேற்ப வீரர் கூடி ஆடு கின்ற ஒரு மரபான கேளிக்கை நிகழ்ச்சி கிளத்தப் பட்டுள்ளது: விழவுவீற் றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன். 92. பதிற்றுப்பத்து; 6, 8 : 1. 93. பதிற்றுப்பத்து; 7; 1 : 16-18. 94. பதிற்றுப்பத்து; 8; 8 : 1.6. 95. பதிற்றுப்பத்து: 6, 6 : 1.3.