பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ஆரியர் ஆரியர் ஒரே ஒரு பாடலிற் குறிப்பிடப் பெற்றுள்ளனர். இவர்கள் இமயமலைச் சாரலில் நிறைந்து வாழ்வதாக இயம்பப்பட்டுள்ளனர்: ஆரியர் துவன்றிய பேரிசை விமயம்." அகவலன் அ. க வ ல ன் எனபபடுவோன் பாணன் ஆவன். அகவலனைப் பற்றிய குறிப்பும் ஒரே பாடலில் தான் வந்துள்ளது. இவர்கள் கணுக்களையுடைய நுண்ணிய கோலை ஏந்திக்கொண்டு, ஊர் மன்றத்தேயிருந்து பாடற் குரிய தலைவன் புகழ்களை யெண்ணி, தெருக்களின் இருமருங்கும் சென்று தலைவன் பொருது வென்ற போர்க்கள வெற்றியை வாழ்த்திப் பாடிக் குதிரைகளைப் பரிசிலாகப் பெறுவர் என்ற செய்தி பரணர் பாட்டால் புலனாகின்றது: மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக் கிண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே...' அந்தணர் அந்தணரைப் பற்றியும் ஒரே ஒரு பாடலில்தான் குறிப்புக் காணக் கிடக்கிறது. இவர்கள் மறையோதுதல் , வேள்வி செய்தல், இவை இரண்டனையும் பிறரைச் செய்வித்தல், வறியவர்க்கொன்று வழங்கல், தமக்கு ஒருவர் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளுதல் என்ற தொழில் ஆறனையும் செய்தொழுகி, அற நூற் பயனை விரும்பி வாழ்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்: 96. பதிற்றுப்பத்து; 2; 1 : 23. 97. பதிற்றுப்பத்து; 5, 3 : 26.28.