பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென்று ஆறுபுரிங் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி." இசை பதிற்றுப்பத்தில் ஐந்து இடங்களில் இசை பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. முத்தமிழில் ஒரு பகுப்பான இசைத்தமிழை அந்நாளில் பாணரும் பாடினியும் கூத்தரும் பொருநரும் வளர்த்தனர்; வேந்தர், குறுநில மன்னர்கள், மக்கள் முதலியோர் ஆதரவு அவர்கட்கிருந்தது. யாழ் பற்றிய குறிப்பும் இவண் இடம் பெற்றிலங்கக் காணலாம். இசை எழும்புவதற்கு நரம்புக் கட்டு முறுக்குடைய தாயிருக்க வேண்டும். இனிய இசையினை வளைவமைந்த கோட்டினையுடைய நல்ல யாழ் எழுப்புகின்றது. ஏவல் இளையர் அவ்வியாழினைச் சுமந்து வருகின்றனர். பண்ணொடு பொருந்துமாறு அமைந்த முழாவும், ஒருகண் மாக்கிணையும், பிற இசைக் கருவிகளும், மூங்கிற்கணுவை யிடைவிட்டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் என்னும் இசைக் கருவியும் ஒருங்கே சேர்த்து ஒருபுறத்தே கட்டிய காவடியின் மறுபக்கத்தே பாடற்றுறைக்கு வேண்டிய கருவியெல்லாம் கூடின பொதியினைச் சுமந்தவராய் இசைத்துறையினைக் கற்று வல்லமை பெற்ற இளைய வர்கள் தாம் செல்லும் வழியில் தீங்கு வாராமைக்கு வேண்டிக் கடவுளைப் பரவிச் செல்கின்றனர்: புணர்புரி நரம்பின் தீந்தொடை பழுனிய வணரமை கல்யாழ் இளையர் பொறுப்பப் பண்ணமை முழவும் பதலையும் பிறவும் கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக் காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் கைவல் இளையர் கடவுட் பழிச்ச." 98. பதிற்றுப்பத்து: 3; 4 : 6.8. 99. பதிற்றுப்பத்து; 5, 1 : 1.6, 5; 6 : 5-6; 6: 7 : 7-9: 7; 5: 14-15; 7; 6 : 1-3; 100. பதிற்றுப்பத்து; 5, 1 : 1.6.